முகப்பு /புதுச்சேரி /

ஒப்பாரி வைத்து வேதனையை தெரிவித்த மக்கள்.. புதுச்சேரியில் நடந்தது இதுதான்..

ஒப்பாரி வைத்து வேதனையை தெரிவித்த மக்கள்.. புதுச்சேரியில் நடந்தது இதுதான்..

X
ஒப்பாரி

ஒப்பாரி வைத்து வேதனையை தெரிவித்த புதுச்சேரி மக்கள்

Pondicherry News : புதுச்சேரி அடுத்த வானூர் மக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த வானூர் அருகே உள்ளது பூத்துறை கிராமம். இங்கு பூத்துறை - பெரம்பை சாலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பட்டனூர், பூத்துறை, பெரம்பை, வாழப்பட்டாம் பாளையம் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிலிருந்து வில்லியனூர் செல்ல இது பிரதான சாலை என்பதால் குண்டும் குழியுமான இந்த சாலையில் செல்ல பொதுமக்கள் பயந்து புதுச்சேரியை சுற்றி 25 கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பூத்துறை, பெரம்பை பொதுமக்கள் ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்ல இந்த வழியை பயன்படுத்துவார்கள். ஆனால், சாலையில் மோசமான பள்ளங்கள் இருப்பதால் நோயாளிகள் இந்த வழியாக செல்வதில்லை. மாறாக புதுச்சேரியை சுற்றி பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒப்பாரி வைத்து வேதனையை தெரிவித்த மக்கள்

இந்நிலையில், சாலையை அமைத்து தரக்கோரி பட்டானூர் பூத்துறை பெரம்பை வாழப்பட்ட பாளையம் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை சாலை போட வில்லை. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வாசலில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த போராட்டத்தில் குண்டும் குழியுமான சாலையில் கீழே விழுந்து கைகால் பாதிப்படைந்தவர், அவரின் உறவினர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, இறப்பு வீட்டு நிகழ்ச்சியில் அழுவதை போல் அழுதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    First published:

    Tags: Local News, Puducherry