முகப்பு /புதுச்சேரி /

புதுவை தும்பூர் நாகாத்தம்மன் ஆலயத்தில் சிவபார்வதி திருமண வைபவம் கோலாகலம்..

புதுவை தும்பூர் நாகாத்தம்மன் ஆலயத்தில் சிவபார்வதி திருமண வைபவம் கோலாகலம்..

X
புதுவை

புதுவை தும்பூர் நாகாத்தம்மன் ஆலயத்தில் சிவபார்வதி திருமண வைபவம் கோலாகலம்

Pondicherry News | புதுவை தும்பூர் நாகாத்தம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ரெயின்போ நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீபுதுவை தும்பூர் நாகாத்தம்மன் ஆலயத்தில் 4ம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஸ்ரீசிவ பார்வதி திருமண வைபவ விழா நடைபெற்றது. இதில் மங்கள வாத்தியங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவ வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை புதுவை தும்பூர் நாகாத்தம்மன் குடும்பத்தினர் மற்றும் ஆலய நிர்வாகி மகாலட்சுமி அசோக் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry