முகப்பு /புதுச்சேரி /

“தமிழ் பேராசிரியர் ஆவதே லட்சியம்" - புதுச்சேரியில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி பேச்சு..

“தமிழ் பேராசிரியர் ஆவதே லட்சியம்" - புதுச்சேரியில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி பேச்சு..

X
புதுச்சேரியில்

புதுச்சேரியில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவி

Pondicherry 12th Exams State Topper Student : புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த மாணவியின் பேட்டி.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த சமையல் கலைஞரின் மகள் தமிழ் பேராசிரியராக விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி மிஜினா தமிழை முதன்மை பாடமாக எடுத்து +2 பொதுத்தேர்வில் 583 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அரசு பள்ளிகளில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

தமிழ் மீது மிகுந்த பற்று கொண்ட மாணவி மிஜினா, கவிதை, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு இதுவரை 200 க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில், லாஸ்பேட்டை பகுதியில் வறுமையான குடும்ப சூழலில் வாடகை வீட்டில் தாய், தந்தையுடன் வசித்து வரும் இந்த மாணவி ஆரம்ப பள்ளி படிப்பு முதம் 12ஆம் வகுப்பு வரை அரசின் உதவிகளை பெற்று, அரசு பள்ளியில் படித்து முதலிடம் பெற்றுள்ளார்.

மேலும், அரசு பள்ளி தன்னை உருவாக்கியது போல, மேற்படிப்பு படித்து தானும் பல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பி.ஏ தமிழ் படிக்க இருப்பதாக தெரிவித்துள்ள அவர், படித்து முடித்த பின்னர் தமிழாசிரியராக வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்துள்ளார். எனவே, தனது மேல் படிப்பிற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனிடையே அரசு பள்ளிகளில் முதல் இடம் பிடித்த மாணவி மிஜினாவை அவரது இல்லத்தில் சந்தித்து அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    First published:

    Tags: Local News, Puducherry