முகப்பு /புதுச்சேரி /

வறுமையால் பள்ளியில் சேர முடியாமல் தவித்த மாணவன்.. புதுவை சமூக ஆர்வலர்கள் செய்த உதவியால் நெகிழ்ச்சி..

வறுமையால் பள்ளியில் சேர முடியாமல் தவித்த மாணவன்.. புதுவை சமூக ஆர்வலர்கள் செய்த உதவியால் நெகிழ்ச்சி..

X
புதுவை

புதுவை சமூக ஆர்வலர்கள்

Pondicherry News : புதுச்சேரியை சேர்ந்த ஏழை மாணவனுக்கு உதவிக்கரம் நீட்டிய சமூக ஆர்வலர்களுக்கு குவிந்து வரும் பாராட்டுக்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த மாணவன் பூபதி 10ம் வகுப்பில் 470 மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்கும் கனவில் இருந்த நிலையில், குடும்பவறுமையின் காரணமாக 11ம் வகுப்பில் சேர முடியாமல் வீடு வீடாக பேப்பர் போடும் பணியை பகுதி நேரமாக செய்து வந்தார்.

மாணவர் பூபதியின் நிலை குறித்துஅறிந்த புதுவை மாநிலம், கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த பெற்றோர் நல சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான நாராயணசாமி மற்றும் அவரது நண்பர்கள், அதிக மதிப்பெண் எடுத்து மேல் படிப்பு படிக்க முடியாமல் பேப்பர் போட்டு வந்த மாணவனுக்கு 11ம் வகுப்பு படிக்க ஆண்டு கட்டணம் ரூ..50 ஆயிரம் ரொக்கம் மற்றும் பாட புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வழங்கினர்.

மேலும், மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவனின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் 2 ஆண்டுகள் இலவசமாக படிக்க உதவியும் செய்து கொடுத்திருக்கின்றனர். மேலும் தாய், தந்தையை இழந்து படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு 9ம் வகுப்பு முதல் கல்விக் கட்டணம் செலுத்தி படிக்க வைத்து வரும் நிலையில் அந்த மாணவி இந்த ஆண்டு 12ம் வகுப்பு படிக்க முதல் பருவ கட்டணம் ரூ.21 ஆயிரம் கல்வி கட்டணம் மற்றும் பாடபுத்தகங்களையும் வழங்கினர்.

புதுவை சமூக ஆர்வலர்கள்

இதேபோல் கடந்த 2022ம் ஆண்டு 12ம் வகுப்பு முடித்து கல்வி கட்டணம் கட்டி TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி மேல்படிப்பு படிக்க முடியாமல் வீட்டு வேலை செய்து வந்த மாணவிக்கு 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு கல்வி கட்டணம் ரூ.58 ஆயிரம் கட்டி மாணவி உயர் கல்வி படிக்க TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி கொடுத்தனர்.

என்ன தான் கையில் பணம் இருந்தாலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் வருவதில்லை. ஆனால் உதவி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. இந்த கல்வி நிதியுதவி அளிக்க உறுதுணையாக இருந்த பார்த்திபன், மிஸ்சஸ் பார்த்திபன், குளங்கள் காப்போம் கார்த்திகேயன், ஆசிரியர் சசி குமார் ஆகியோருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry