முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி குறத்தி பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா.. 508 பால்குடங்களுடன் ஊர்வலம் சென்ற பக்தர்கள்..

புதுச்சேரி குறத்தி பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா.. 508 பால்குடங்களுடன் ஊர்வலம் சென்ற பக்தர்கள்..

X
புதுச்சேரி

புதுச்சேரி குறத்தி பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ விழா

Puducherry News | புதுச்சேரி மாநிலம் புதுநகர் சஞ்சீவி நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகுறத்தி பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி  சிறப்பு பூஜை மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி புதுநகர் சஞ்சீவி நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகுறத்தி பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி நடைபெற்ற 508 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மாநிலம் புதுநகர் சஞ்சீவி நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகுறத்தி பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் 38ம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி சிறப்பு பூஜை மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. கெங்கையம்மன் குளக்கரையில் இருந்து 508 பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து ஸ்ரீகுறத்தி பரமேஸ்வரி அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகளான ஜெயபாலன், ஜெயமூர்த்தி மற்றும் நிர்வாகத்தினர், ஊர் முக்கிய்பிரமுகர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry