வளரும் மாநிலங்கள் வளரும் மாநிலஙகள் என்று எந்த வித்தியாசமும் இன்றி இந்தியா முழுதும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒரு பிரச்சனை பொதுமக்கள் சுவற்றில் சிறுநீர் கழிப்பது. அதிலும் பொதுக்கழிப்பிடம், பள்ளிக்கூடம், கல்லூரி, சினிமா தியேட்டர், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ரெயில், பொது அலுவலகங்கள் இவைகளில் உள்ள கழிப்பிடங்களை பயன்படுத்தாது பொது வெளியில் சிறுநீர் கழிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. இதைத் தடுக்க சிறுநீர் கழிக்கும் பொது இடங்களில் பல்வேறு கடவுள் படங்களை வரைந்து வைத்தும், இங்கு சிறுநீர் கழிக்காதே நாயே என்ற ரேஞ்சில் எச்சரிக்கை பலகைகள் எழுதி வைத்தும் பயனில்லை.
பொது சுவரில் போஸ்டர் ஒட்டுவது மற்றும் அதில் சிறுநீர் கழிப்பதை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் புதுச்சேரி சேர்ந்த சமூக தொண்டு நிறுவனம் (Laugh-O-Gram foundation) சார்பில் இளைஞர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இணைந்து புதுச்சேரியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களை அழகாக சுற்றுலா பயணிகளுக்கு வெளிப்படுத்தும் விதமாக கம்பன் கலையரங்கம் அருகில் உள்ள சுவற்றில் ஓவியங்கள் வரைந்து உள்ளனர். அழகாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்களை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒரு நிமிடம் நின்று பார்த்து ரசித்துவிட்டு தான் செல்கின்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இது தொடர்பாகப் பேசிய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவிக்கும் போது, எங்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை நாங்கள் தொடர்ந்து மற்ற சுவர்களிலும் வரைய திட்டமிட்டுள்ளோம். இது போன்ற முயற்சிகள் மட்டுமல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒழுக்கம் தேவை, நம் பகுதியை நாம் தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதன் அவசியத்தைஉணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் என்ற அனைவரிடமும் கோரிக்கை வைத்து நம்மிடமிருந்து விடைபெற்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry