புதுச்சேரியில் உள்ள பிரொவிடன்ஸ் மாலில் மூன்றாவது மாடியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க பொதுமக்களை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது...
புதுச்சேரி-கடலூர் சாலையில் புதிய நீதிமன்றம் வளாகத்திற்கு எதிரே தனியாருக்கு சொந்தமான மால் உள்ளது. நான்கு மாடி கட்டிடத்தில் அனைத்து விதமான கடைகளும் மற்றும் சினிமா தியேட்டர்களும் உள்ளது. மூன்றாவது தளத்தில் food court எனப்படும் உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 7.30 மணியளவில் 3வது மாடியில் உள்ள உணவகம் ஒன்றின் சமையல் அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் மூன்றாவது மாடி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களை மூன்றாவது மாடியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
மேலும் மாலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பான் மூலம் ஊழியர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இது குறித்து புதுச்சேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க : செங்கோட்டைக்கு போனீங்கன்னா இந்த ஸ்பெஷல் உணவை சாப்பிட மறக்காதீங்க!
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்குக்கு முக்கிய இடமாக விளங்குவது பிரொவிடன்ஸ் மால். இங்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட நபர்கள் வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pondicherry, Puducherry