முகப்பு /புதுச்சேரி /

நடிகர் அஜித்தின் பைக் சுற்றுலா நிறுவனம்.. ஓவியத்தில் அன்பை வெளிப்படுத்திய புதுச்சேரி காவலர்..

நடிகர் அஜித்தின் பைக் சுற்றுலா நிறுவனம்.. ஓவியத்தில் அன்பை வெளிப்படுத்திய புதுச்சேரி காவலர்..

X
அஜித்தின்

அஜித்தின் உருவத்தை வரையும் புதுச்சேரி காவலர்

Pondicherry Police : அஜித் தொடங்க உள்ள பைக் சுற்றுலா நிறுவனத்தை புதுச்சேரி காவலர் வினோத் வரவேற்றுள்ளார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் கடந்த 18 ஆண்டுகளாக காவல்துறையில் ஐ.ஆர்.பி. பிரிவில் பணியாற்றி வருகிறார். ஓவியத்தின் மீது ஆர்வம் கொண்டு சிறுவயது முதல் பல்வேறு ஓவியப்போட்டி மற்றும் பல்வேறு கண்காட்சியில் கலந்து கொண்டு ஓவியங்கள் வரைந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு வரும் நடிகர்களுக்கு தன் கைகளால் வரைந்த ஓவியங்களை நினைவு பரிசாக வழங்கி வருகிறார். மேலும் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி,  விக்ரம், இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோரின் படங்களை வரைந்து ஓவியத்தை பரிசாக வழங்குவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

விக்னேஷ் சிவனுடன்...

இந்நிலையில், அஜித் தொடங்க உள்ள சுற்றுலா நிறுவனத்தை வரவேற்று சுமார் 12 கிலோ கோலமாவைக் கொண்டு மிகப்பெரிய அஜித் படத்தை வரைந்து உள்ளார் காவலர் வினோத். இந்த ஓவியத்தை தற்போது ஏராளமானோர் கண்டு ரசித்து வரும் நிலையில், தற்போது மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry