புதுச்சேரி காவல்துறையினரின் செயலால் வாகன ஓட்டிகள் நெகிழ்ந்துபோயினர்.
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் புதுச்சேரியில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும், வெளியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்டு ஏதாவது மரத்தடி நிழலில் நின்று இளைப்பாரி செல்லும் நிலைக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது.
இந்த வெயிலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலை ஓரம் உள்ள இளநீர் கடை, பண நுங்கு கடை, வெள்ளரிப மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை உட்கொண்டு தாகத்தை தனித்து வருகின்றனர்.
இந்நிலையில், வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக நல ஆர்வலர்கள் என அனைவரும் சாலையின் ஓரம் மற்றும் முக்கிய சந்திப்பு, மக்கள் அதிக கூடும் இடங்கள் ஆகியவற்றில் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்க பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ஐ.டியில் பணிப்புரிந்து கொண்டே இயற்கை விவசாயம் செய்து அசத்தும் தென்காசி இளைஞர்!
இதற்கிடையில், பொதுமக்கள் வெயிலால் படும் அவஸ்தயை நேரடியாக பார்க்கும் காவல்துறையினரோ, இன்னும் ஒரு படி மேலே சென்று, பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி, வெள்ளரி பிஞ்சு போற்றவற்றை கொடுத்து வெயிலின் தாக்கத்திலிருந்து உடலை குளிர்வித்து பாதுகாக்க துணைபுரித்து வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரியில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் காலாப்பட்டு காவல் நிலையம் நுழைவாயில் முன்பு நீர் மோர் பந்தல் அமைத்த காலப்பட்டு போலீசார் அந்த வழியே நடந்து சென்ற பாதசாரிகளுக்கும், மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற பொது மக்களை அழைத்து நீர்மோர் வழங்கி வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை சற்றே இளைப்பாற செய்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
காலாப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனின் இந்த நற்செயல் அந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry