முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா!

புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா!

X
கூத்தாண்டவர்

கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

Pillaiyarkuppam Koothandavar kovil : புதுச்சேரி பிள்ளையார் குப்பம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த பிள்ளையார்க்குப்பம் பகுதியில் பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து, 25ம் தேதி ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிலையில், மே 3ம் தேதி கூத்தாண்டவர் சாமிக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான திருநங்கைகள் வந்து தாலிக்கட்டிக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தீபாய்ந்தான் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.

கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தரணி, துணைத் தலைவர் பத்மநாபன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராஜ் உறுப்பினர் நாகப்பன் மற்றும் கிராம மக்கள் திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அழுகள நிகழ்ச்சியும், மே 18ம் தேதி படுகளம் எழுப்புதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puducherry