முகப்பு /புதுச்சேரி /

புதுவை பெரம்பை ஸ்ரீஏழை மாரியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா.. பக்தர்கள் பரவசம்!

புதுவை பெரம்பை ஸ்ரீஏழை மாரியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா.. பக்தர்கள் பரவசம்!

X
புதுவை

புதுவை பெரம்பை ஸ்ரீஏழை மாரியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

Perambai Muthumari Amman Temple chariot festival 2023 : புதுவை பெரம்பை கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் தேர்த்திருவிழா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது ‌ .

முன்னதாக கடந்த திங்களன்று ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், செவ்வாய் அன்று அம்மனுக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வாக புதன் கிழமை தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதுவை பெரம்பை ஸ்ரீஏழை மாரியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

இதில், பெரம்பை கிராம மக்கள் உட்பட சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதனைத் தொடர்ந்து தேர்வீதி உலா பெரம்பை கிராமம் முழுவதும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.

மேலும், வழி நெடுங்கிலும் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், கூல்டிரிங்ஸ், பிஸ்கட் பாக்கெட்கள் ஆகியவற்றை தேர் இழுக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பெரம்பை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry