புதுச்சேரி மாநிலத்தில் குடிமைப்பொருள் வழங்கல் துறையால் கவுரவ குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் தற்போது அனைத்து வகை (சிவப்பு/மஞ்சள் நிறம்) குடும்ப அட்டை பெற்றுள்ளவர்களும் கவுரவ குடும்ப அட்டை பெற தகுதி வாய்ந்தவர்கள் என்றும் அரசின் இலவசங்கள் தேவைப்படாத, வசதி வாய்ந்த குடும்பங்கள், இந்தவாய்ப்பை பயன்படுத்தி புதுச்சேரி அரசின் கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; கண் தொடர்பான சிக்கல்களை போக்கும் 7 பயிற்சிகள்..! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க..
மேலும், கவுரவ குடும்ப அட்டை பெற்றவர்கள் புதுச்சேரியின் சிறப்பு பிரஜைகளாக கருதப்பட்டு குடிமைப்பொருள் வழங்கல் துறையால் அளிக்கப்படும் அரசின் இலவசங்கள் எதுவும் வழங்கப்படாது என்றும் புதிய கவுரவ குடும்ப அட்டை வேண்டுபவர்கள் குடும்ப தலைவர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் அசல் குடும்ப அட்டையையும் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்து கவுரவ குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உதவிக்கு 9442194480 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு அல்லது அதே எண்ணில் Whatsapp/ குறுஞ்செய்தி மூலமாக தகவல் பெறலாம் என்றும் இதேபோல் மின்னஞ்சல் desca@py.gov.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry, Ration card