முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்!

புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்!

X
புதுச்சேரி

புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

Pondicherry Narasimmar Swamy Temple : நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தவளக்குப்பத்தை அடுத்துள்ள சிங்கிரிகுடி கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிரசித்திபெற்ற லட்சுமி நரசிம்மன் சுவாமி கோவிலின் சித்திரை பிரமோற்சவ பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீகனகவல்லி சமேத பதினாறு திருகரங்களைக் கொண்ட உக்ரநரசிம்ம சுவாமிக்கு தினந்தோரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் வாகனசேவை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் காலை நடைபெற்றது. அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனர். நரசிம்ம ஜெயந்தி என்பதால் கூடுதலான பக்தர்கள் வருகை தந்து ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிலையில், இன்று (7ம் தேதி) ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை லட்சுமி நரசிம்ம பெருமாள் பக்தர்கள், சிங்கிரிகுடி பொதுமக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry