முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி மொரட்டாண்டியில் 16 அடி ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு 7 மணி நேர தொடர் அபிஷேகம்..

புதுச்சேரி மொரட்டாண்டியில் 16 அடி ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு 7 மணி நேர தொடர் அபிஷேகம்..

X
ரீலட்சுமி

ரீலட்சுமி நரசிம்மருக்கு 7 மணி நேர தொடர் அபிஷேகம்

Pondicherry News | புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி ஆசிரமத்தில் புதியதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 16 அடி ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு ஏழு மணி நேர தொடர் அபிஷேகம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி ஆசிரமத்தில் புதியதாக கும்பாபிஷேகம் நடைபெற்ற 16 அடி உயர ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 7 மணி நேரம் மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதன்படி காலை 6 மணிக்கு துவங்கிய அபிஷேகம் 108 கிலோ சந்தனம், மஞ்சள், விபூதி மற்றும் 108 லிட்டர் தயிர், பால், தேன் உட்பட பொருட்களை கொண்டு மதியம் 2 மணி வரை தொடர் அபிஷேகம், ஆலய பீடாதிபதி நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry