முகப்பு /புதுச்சேரி /

இருளில் மூழ்கும் புதுவை குருமாம்பட்டு வழுதாவூர் சாலை.. அச்சத்தில் மக்கள்..

இருளில் மூழ்கும் புதுவை குருமாம்பட்டு வழுதாவூர் சாலை.. அச்சத்தில் மக்கள்..

X
குருமாப்பட்டு

குருமாப்பட்டு வழுதாவூர் சாலை

Pondicherry Kurumapattu Industrial Estate | ஹைமாஸ் விளக்கு எரியாததால் இரவு 6 மணிக்கு மேல் வழுதாவூர் சாலை முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரி பொருளாதாரத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது குருமாம்பட்டு தொழிற்பேட்டை. அதே நேரத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் என அனைவரும் உபயோகப்படுத்தப்படும் சாலையாக உள்ளது இந்த வழுதாவூர் சாலை. ஆனால் இரவு 6 மணிக்கு மேல் இச்சாலை முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது.

ஏனென்றால் இங்கு அமைக்கப்பட்டுள்ள ஹை மாஸ் விளக்கு பல மாதங்களாக எரியாமல் இருப்பது தான் இந்த இருளுக்கு காரணம். இதனால் அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவதாகும் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் இருளில் மூழ்கிய குருமாம்பேட் வழுதாவூர் சாலையில் எரியாமல் உள்ள ஹைமாஸ் விளக்கை உடனே வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கருத்தில் கொண்டு உடனே சரி செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது .

First published:

Tags: Local News, Puducherry