முகப்பு /புதுச்சேரி /

குழந்தை பாக்கியம் பெற புதுச்சேரி கூத்தாண்டவர் கோவிலில் நூதன வழிபாடு!

குழந்தை பாக்கியம் பெற புதுச்சேரி கூத்தாண்டவர் கோவிலில் நூதன வழிபாடு!

X
புதுச்சேரி

புதுச்சேரி கூத்தாண்டவர் கோவிலில் நூதன வழிபாடு

Pondicherry Koothandavar Kovil Festival | திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புதுவை பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள கூத்தாண்டவர் ஆலயத்தில் விநோதமான முறையில் வழிபட்டால் வேண்டுல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சித்திரை மாத பௌர்ணமியையொட்டி விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் ஆலயத்தில் விழா வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதேபோல் புதுச்சேரி அடுத்த பிள்ளையார் குப்பம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை மாத சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனைத்தொடர்ந்து ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சியும், இரவு கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணமும், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் மட்டுமில்லாமல் ஆண்களும் கலந்து கொண்டு தாலி கட்டிக் கொண்டனர். மேலும், தங்கள் கைகளில் வளையல் அணிந்து கொண்டனர்.

புதுச்சேரி கூத்தாண்டவர் கோவிலில் நூதன வழிபாடு

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள், இந்த ஆலயத்தில் வழிபட்டு தாலி கட்டிக் கொண்டு, தங்களின் கைகளில் வளையல்களை அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டால், வேண்டுதல் உடனடியாக நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகிகள் போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி மூன்று சுற்றாக நடைபெற்றது.

முதல் சுற்று பாரம்பரிய உடைகளிலும், 2வது சுற்று மாடர்ன் உடைகளிலும், 3வது சுற்று தனித்திறமைகள் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து உயரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்ச்சியில் பிள்ளையார்குப்பம் மட்டுமின்றி புதுச்சேரியை சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

First published:

Tags: Local News, Puducherry