முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் தரமற்ற குடிநீர் வினியோகம் என பொதுமக்கள் புகார்..

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் தரமற்ற குடிநீர் வினியோகம் என பொதுமக்கள் புகார்..

X
புதுச்சேரி

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பேட்

Puducherry News | புதுச்சேரியில் தரமற்ற குடிநீர் வினியோகம் என பொதுமக்கள் புகார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பேட் பகுதியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களுக்கு அங்குள்ள கங்கா பவானி அம்மன் கோவில் குளத்தின் அருகில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலமாக தினமும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் கடந்த சில வாரங்களாக கலங்களாகவும், உவர்ப்பு சுவையுடனும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அருகில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும் குடிநீர் சுவையற்ற நிலையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக கங்கா பவானி அம்மன் கோவில் குளத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தண்ணீர் முழுவதையும் இறைத்து மீன்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் போடப்பட்ட போர்வெல்லில் இருந்து அந்த குளத்துக்கு தண்ணீர் விடப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, கிருமாம்பாக்கம் பேட் பகுதிக்கு குடிநீர் விநியோகிக்க 2 போர்வெல்கள் அமைக்கப்பட்டது. அதில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் தரமில்லாததால் அந்த போர்வெல்லில் இருந்து குடிநீர் எடுப்பது கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இதனால் ஒரே ஒரு போர்வெல்லில் இருந்து மட்டும் தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் நன்றாக இருந்தது என தெரிவித்து உள்ளனர். ஆனால் பொதுமக்கள் பல நாட்களாக தரம் குறைந்து விட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில், அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சோதனை செய்து விட்டு சுத்திகரிப்பு குடிநீர் வழங்கு வதை நிறுத்தியுள்ளனர். இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 100சதவீதம் தரமான குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry