சூரபத்மன் எனும் அரக்கன் அட்டகாசங்கள் எல்லை மீற, அவனது கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டி சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை படைத்தார். அந்த தீ பொறிகள் ஆறு குழந்தைகளாக மாறின அவற்றை ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர். அந்த ஆறு குழந்தைகளையும் அன்னை பார்வதி கட்டி அணைத்து ஒரு குழந்தையாக மாற்றினாள்.
ஆறுமுகன்
ஆறுமுகங்களுடன் இருந்த அந்த குழந்தைக்கு முருகன் எனப் பெயரிட்டாள் அன்னை. இந்த சமயத்தில் சூரபத்மன் அளவிலாத கொடுமைகளை செய்துகொண்டிருந்தான்.
சூரபத்மனை வதம் செய்ய முடிவு செய்த சிவன், முருகனை தனது படைகளுக்கு தளபதியாக நியமித்தார். அன்னை பார்வதி தனது சக்தியை வேலில் உருவேற்றி முருகனுக்கு ஆயுதமாக அளித்தார்.
முருகன் வேலோடும், படையொடும் சூரபத்மனை அழிக்கப் புறப்பட்டார். முதலில் சிங்கமுகனையும், தாரகாசுரனையும் வதம் செய்தார். இறுதியில் சூரபத்மனை அழித்தார். தோல்வியை ஏற்காத சூரபத்மன் ஒரு மரமாக மாற முருகன் அந்த மரத்தை தனது வேல் கொண்டு இரண்டாகப் பிளந்தார். முருகன் சூரனை வதம் செய்த நாளன்று முருகன் கோயில்களில் பொம்மை அசுரனை அழிக்கும் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது.
சூரசம்ஹார விழா
அவ்வாறு புதுச்சேரி, கதிர்காமம் பகுதியில் உள்ள கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு சூரசம்ஹார விழா கடந்த 20ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் இரவு நேரத்தில் கதிர்வேல் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு:
தொடர்ந்து நேற்று அம்பாளியிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்துஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளிய கதிர்வேல் சுவாமியின் சூரசம்ஹார விழா விமரிசையாக நடைபெற்றது. சூரபத்மனை வேல் கொண்டு வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Murugan temple, Puducherry, Soorasamharam