புதுச்சேரி பாவாணர் நகரில் உள்ள ஜலகண்ட முத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி உழவர்கரை தொகுதி பாவாணர் நகரில் எழுந்தருளியுள்ள ஶ்ரீ விஷ்ணு, ஶ்ரீ துர்கை, ஶ்ரீ கர்பரட்சாம்பிகை, ஶ்ரீ நவக்கரகங்கள், ஶ்ரீ நாகதேவர்கள் மற்றும் ஶ்ரீ ஜலகண்ட முத்த மாரியம்மன், ஶ்ரீ ஜலகண்ட தர்மசாஸ்தா ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 5ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் தொடங்கிய விழாவானது கணபதி ஹோமம், முதல்காலம், இரண்டாம் காலம், 3ஆம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை 4 கால யாக பூஜை நடத்தப்பட்டு வேதிகா பூஜைகள் செய்யப்பட்டன.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அருள்மிகு ஶ்ரீ ஜலகண்ட முத்து மாரியம்மன் கோவில் கோபுரம் மற்றும் பரிவாரங்களின் கோபுரங்களுக்கு ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையும் படிங்க | ஆரோவில் அருகே அருஞ்சுவை உணவு கொடுத்து அசத்திய கிராம மக்கள்!
தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் பாஜக அனைத்து பிரிவுகளின் பொருப்பாளர் சரவணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தலைவர் முருகன், துணைத்தலைவர்கள் உதயகுமார், அன்பழகன், செல்வம், செயலாளர் சரவணன், பொருளாளர் கண்ணன், கவுரவத்தலைவர் ஞானவேல் மற்றும் ஆலய நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள்செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற உள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry