முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை எச்சரித்த உள்துறை அமைச்சர்..

புதுச்சேரியில் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரியை எச்சரித்த உள்துறை அமைச்சர்..

X
மாதிரி

மாதிரி படம்

Puducherry News | லஞ்சம் வாங்கியதால் அரசு அதிகாரியை உள்துறை அமைச்சர் எச்சரித்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • puducherry, India

புதுச்சேரி அரசின் இலவசங்கள் வேண்டாதவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்து கௌரவ குடும்ப அட்டைக்கு பதிவு செய்யும் நிகழ்வு குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் துறை அலுவலகத்தில் தொடங்கியது. இதில் பாஜக அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று குடும்ப அட்டைகளை சரண்டர் செய்து கௌரவ குடும்ப அட்டைக்கு பதிவு செய்தனர்.

அப்போது துணை இயக்குனர் ரவிச்சந்திரனை பார்த்த பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தொகுதி மக்களுக்கு ரேஷன் கார்டு தொடர்பாக பரிந்துரை செய்து அனுப்பினால் அதை ஏற்க மாட்டீர்களா? மக்களை உதாசீனப்படுத்துவது நியாயமா? அவர்கள் கொடுக்கும் மனுக்களை தூக்கி வீசுவதா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு குடும்ப அட்டை பெறுவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் வந்துள்ளது என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குற்றம்சாட்டி பேசினார்.

மேலும் ஒரு நாளைக்கு ரூ.50,000 லஞ்சம் பெறுவதாக புகார் வருகிறது எனவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட பாஜக எம்எல்ஏ கல்யாண சுந்தரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை எச்சரித்தார். இதனைத்தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்கள், “அமைச்சர்கள் கையப்பமிட்டு அனுப்பினால், உடனடியாக கையொப்பமிட்டு உடனே தர வேண்டுமா? என நீங்கள் கூறியதாக மக்கள் எங்களிடம் தெரிவிக்கின்றனர்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினர்.

First published:

Tags: Local News, Puducherry