முகப்பு /புதுச்சேரி /

ஆளுநர் உத்தரவு.. பாரம்பரிய ஆடையில் பணிக்கு வந்த புதுவை அரசு ஊழியர்கள்..

ஆளுநர் உத்தரவு.. பாரம்பரிய ஆடையில் பணிக்கு வந்த புதுவை அரசு ஊழியர்கள்..

வேஷ்டி - சட்டை, சேலையில் புதுவை அரசு ஊழியர்கள்

வேஷ்டி - சட்டை, சேலையில் புதுவை அரசு ஊழியர்கள்

Puducherry Govt Employees | தலைமை செயலகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த ஆண், பெண் ஊழியர்கள் வேட்டி, சேலை என பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சில நாட்களுக்கு முன்பு இரு உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், நெசவாளர்கள் பயனடையும் வகையில் மாதத்தின் முதல்நாள் அரசு ஊழியர்கள் நமது பாரம்பரிய உடையான கதர், கைத்தறி ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் மாதந்தோறும் 15ந் தேதி அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்த வேண்டும்.

இந்த கூட்டத்தில் உயரதிகாரிகள் தவறாமல் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதனை தொடர்ந்து பிப்ரவரி 1 ஆம் தேதி யான நேற்று மாதத்தின் முதல்நாள் என்பதால் ஆளுநர் உத்தரவின்படி பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேட்டி, சேலை அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

தலைமை செயலகத்தில் பல அரசு துறைகளை சேர்ந்த ஆண், பெண் ஊழியர்கள் வேட்டி, சேலை என பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். இதேபோல வரும் 15ந் தேதி பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கும் அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Puducherry