முகப்பு /புதுச்சேரி /

ஆமை வேகத்தில் நடைபெறும் புதுச்சேரி - கடலுார் சாலை சீரமைப்பு பணி.. விரைந்து முடிக்க கோரிக்கை..

ஆமை வேகத்தில் நடைபெறும் புதுச்சேரி - கடலுார் சாலை சீரமைப்பு பணி.. விரைந்து முடிக்க கோரிக்கை..

X
புதுச்சேரி

புதுச்சேரி - கடலுார் சாலை பணி

Pondicherry To Cuddalore Road : புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் தார் சாலை சீரமைக்கும் பணி, முழுமை பெறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்ததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர். இச்சாலையை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவங்கியது.

பருவ மழையை காரணம் காட்டி, 5 மாதங்கள் வரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் சாலையை சீரமைக்கும் பணி மீண்டும் துவங்கியது. ஆமை வேகத்தில் நடைபெற்ற பணிகள் இன்னும் பல இடங்களில் முழுமை பெறாமல் உள்ளது. குறிப்பாக, பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவனை முதல் அங்குள்ள எம்.எல்.ஏ., அலுவலம் வரையிலும், அதேபோல், ராஜிவ்காந்தி பொறியில் கல்லுாரி முதல் ஆறுபடை வீடு மருத்துவமனை வரையிலும் சாலையின் மேற்கு பகுதி பாதி வரை புதுப்பிக்கப்பட்டு, மீதி பகுதி அப்படியே விடப்பட்டுள்ளது.

கிடப்பில் உள்ள புதுச்சேரி - கடலுார் சாலை சீரமைப்பு பணி

பழைய சாலை, புதிய சாலை இணையும் பகுதி மேடு பள்ளமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாது சாலை புதிதாக போடப்பட்ட இடத்தில் பல இடங்களில் பள்ளம் விழுந்துள்ளன. இதனையும் சரி செய்து கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிகௌகை வைத்து, எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கிருமாம்பாக்கத்தில் முழுமை பெறாமல் உள்ள தார் சாலை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos
    First published:

    Tags: Local News, Puducherry