கோடைக்காலத்தில் வழக்கமாக மதுவை விட பீர் விற்பனை அதிகரிக்கும். அந்த வகையில், பீர் விற்பனை வழக்கத்தை விட 40 மடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் கிடைக்கும் மதுவிற்கு உலகளவில் மவுசு உண்டு. இங்குத் தயாரிக்கப்படும் மது வகைகளுக்கு எப்போதும் பஞ்சமிருப்பதில்லை. வெளிநாடு மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்படும் மது வகைகள் சுமார் 900 பிராண்ட் புதுச்சேரியில் விற்பனையாகிறது.
புதிய பிராண்டு மது வகைகளை ருசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்தும், பிரெஞ்சு காலணி நாடுகளின் பகுதிகளில் இருந்தும் மக்கள் குட்டி கோவா என அழைக்கப்படும் புதுச்சேரிக்குப் படையெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பீர் வகைகள் புதுச்சேரிக்கு இறக்குமதி செய்து விற்பனை ஆகிறது. அந்த வகையில், சுமார் 33 பிராண்ட் பீர்கள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5 பிராண்டுகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகிறது.
அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹரியானா, குஜராத் என பல மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
வழக்கமாக மாதத்திற்கு சுமார் 2 லட்சம் கேஸ் பீர்கள் இங்கு விற்பனையாகும். தற்போது மாதத்திற்கு 3 லட்சம் கேஸ் பீர் என விற்பனையாகிறது. புதுச்சேரி அண்ணா சாலையில் ஒரு தனியார் நிறுவனம் மைக்ரோ பீர் தொழிற்சாலை மூலம் பீர் தயாரிக்கிறது. இங்கு பீர் தயாரிப்பை நேரடியாக வாடிக்கையாளர்கள் பார்த்தபடியே பீர் அருந்தலாம். இங்கு மாம்பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெரி எனப் பல வகைகளில் பீர் கிடைக்கிறது.
தற்போது கோடை வெயில் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மதுபிரியர்களை திருப்திப்படுத்த வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வதாகக் கூறும் விற்பனையாளர்கள், வழக்கத்தை விட 40 சதவீதம் வரை விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beer, Puducherry