முகப்பு /புதுச்சேரி /

10 அடி ஆழ்கடலில் தேசிய கொடி ஏற்றிய காவல் ஆய்வாளர்- புதுச்சேரியில் புதிய முயற்சி

10 அடி ஆழ்கடலில் தேசிய கொடி ஏற்றிய காவல் ஆய்வாளர்- புதுச்சேரியில் புதிய முயற்சி

X
ஆழ்கடல்

ஆழ்கடல் கொடியேற்றம்

Puducherry | புதுச்சேரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு 80 அடி ஆழ்கடலில் காவல் ஆய்வாளர் தேசிய கொடி ஏற்றினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், மாநிலத் தலைநகரங்களில் ஆளுநர்களும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சித் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதேபோல பலரும் தனிப்பட்ட முறையில்தேசியக் கொடியை ஏற்றி தேசப் பற்றை வெளிப்படுத்தினர். வழக்கமாக நிலத்திலும் மலை உச்சியிலும் தேசியக்கொடி பறப்பது பரவசத்தை ஏற்படுத்தும். புதுச்சேரியில் கடலிலும் தேசியக்கொடியை ஏற்றுதல் மற்றும் வலம் வருதல் நிகழ்வுகளும் நடைபெற்றன.

புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் ஆழ்கடல் நீச்சல் பள்ளியின் மூலம் சைபர் கிரைம் பிரிவு காவல்துறை ஆய்வாளர் கீர்த்தி தேசப்பற்றினை அனைவரிடத்திலும் உணர்த்தும் விதமாக புதுச்சேரியில் உள்ள வங்கக் கடலில் 80 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் தொலைவு வரை தேசியக் கொடியை கையில் ஏந்தியவாறு பயணம் மேற்கொண்டுள்ளது பொது மக்களிடம் பரவசத்தைஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி ஆவணப்படத்தால் நள்ளிரவில் பல்கலைக்கழகத்தில் வெடித்த மோதல்.. புதுச்சேரியில் பரபரப்பு!

இப்பயணம் தொடர்பாக பேசிய அவர்கள், ‘சுதந்திரத்துக்காகப் போராடியோர் தியாகங்களை நாம் என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இப்பயணத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டனர்.

First published:

Tags: Local News, Puducherry