புதுச்சேரி நகர பகுதியில் தினமும் 350 டன் வரையும், பண்டிகை காலங்களில் கூடுதலாக 100 டன் வரையும் குப்பை குவிகிறது. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட்டில் உள்ள 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கை உழவர்கரை நகராட்சி பராமரித்து வருகிறது. இங்கு கடந்த 2005ம் ஆண்டு முதல் குப்பை கொட்டப்பட்டு வருவதால் 8 லட்சம் டன் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பையை பயோ மைனிங் தொழில்நுட்ப முறையில் ரூ.42 கோடி செலவில் அகற்ற முடிவுசெய்யப்பட்டது.
இந்த குப்பையை பயோ மைனிங் தொழில்நுட்ப முறையில் ரூ.42 கோடி செலவில் அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்தாண்டு ஜூலை மாதம் ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்த குப்பையை அகற்றும் பணியை தொடங்கியது. மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளில் குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் பயன்படுத்தி 23 ஏக்கரில் உள்ள குப்பைகளையும் அகற்றிவிட்டு வெற்று நிலமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். கடந்த ஓராண்டாக நடந்து வரும் இப்பணியில் டெண்டர் விடப்பட்ட 5.53 லட்சம் டன் குப்பையில் இதுவரை 3.57 லட்சம் டன் அளவிற்கு பையோ மைனிங் தொழில்நுட்ப முறையில் திடக்கழிவு மேலாண்மை செய்யப்பட்டுள்ளது.
திடக்கழிவு செய்யப்பட்ட 3.57 லட்சம் டன் குப்பையில் 1.70 லட்சம் டன் குப்பை கிடங்கில் இருந்து வெளியேற்றி ஆகிவிட்டது. மறுசுழற்சி செய்யப்பட்ட குப்பை, மணல் 1.87 லட்சம் டன் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதில் 70 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் மலைபோல் குவிந்துள்ளது. இவை அகற்றப்படாமல் குப்பை கிடங்கிற்கு அப்படியே இடையூறாக உள்ளது. திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்டுள்ள இந்த பிளாஸ்டிக் பொருட்கள், வெயிலில் எரியும் அபாயம் உள்ளதால் சுற்றுப்புற கிராமங்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
திடக்கழிவு மேலாண்மையில் கிடைத்த பிளாஸ்டிக் பொருட்கள் சிமெண்ட் தொழிற்சாலை களுக்கு தேவைப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் தற்போது பிளாஸ்டிக் பொருட்களை எரிபொருளாக பயன்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக குருமாம்பேட் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் பொருட்கள் மலைபோல் குவிந்துள்ளது. பிற மாநிலங்களில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த மாநிலங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை அனுப்பினால், குருமாம்பேட் குப்பை கிடங்கிற்கு போதிய இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருமானம் கிடைக்கும். இது தொடர்பாக கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry