முகப்பு /புதுச்சேரி /

விளையாட்டு மைதானத்தால் அரசு வேலை பெற்ற புதுச்சேரி கிராம மக்கள்..

விளையாட்டு மைதானத்தால் அரசு வேலை பெற்ற புதுச்சேரி கிராம மக்கள்..

X
புதுச்சேரி

புதுச்சேரி

Pondicherry Pichaiveeranpet Village | புதுச்சேரியின் பிச்சைவீரான்பேட் கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள மைதானத்தினால் அரசு வேலைகளை அதிகம் பெற்றுள்ளனர். அதெப்படினு கேக்குறீங்களா?

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரி உழவர்கரை தொகுதியில் பிச்சைவீரான்பேட் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றன என கூறப்படுகிறது. அங்கு வசிக்கும் பெரியவர்கள் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் ஊரை சார்ந்து ஒரு விளையாட்டு மைதானத்தை ஏற்படுத்தினர்.

இந்த மைதானத்தில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தினமும் கபடி, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி எடுத்து தங்களின் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தி அரசு வேலையை பெற்றுள்ளனர்.

மேலும் ஊரில் வசித்து வருபவர்களில் 50 சதவீதத்துக்கும் மேலான மக்கள் தற்போது அரசு வேலை பெற்றுள்ளனர் என்று கூறுகின்றனர். தற்போதும் எதிர்வரும் சந்ததியினருக்கு தாங்கள் கற்றுத் தேர்ந்த விளையாட்டுக்களையும் கலைகளையும் அப்பகுதி இளைஞர்கள் கற்றுத் தந்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry