முகப்பு /செய்தி /புதுச்சேரி / 8 வயதில் விபத்தில் கால் இழப்பு... நம்பிக்கையுடன் பெட்ரோல் பங்கில் வேலை... குழந்தைகள் படிப்புக்காக ஏங்கும் மாற்றுத்திறனாளி

8 வயதில் விபத்தில் கால் இழப்பு... நம்பிக்கையுடன் பெட்ரோல் பங்கில் வேலை... குழந்தைகள் படிப்புக்காக ஏங்கும் மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி நபர்

மாற்றுத்திறனாளி நபர்

புதுச்சேரியில் 8 வயதில் விபத்தில் கால் இழந்து தன்னம்பிக்கையுடன் உழைத்து வரும் நபர் அவரின் குழந்தைகளில் கல்விக்கு உதவிக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி வில்லியனூரைச் சேர்ந்தவர் மோகன்(40). அவர் 8 வயதில் பள்ளி செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் கால் துண்டிக்கப்பட்டது. 6 ஆம் வகுப்பு வரை படித்துள்ள மோகன் அதற்கு மேல் மாணவர்கள் தங்களைக் கேலி செய்வார்கள் என்ற எண்ணத்தில் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளார். அதன் பிறகுத் தனது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட மோகனுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள். அதில் மகனை அரசுப் பள்ளியிலும் மகளைத் தனியார்ப் பள்ளியிலும் படிக்க வைத்து வருகின்றார்.

ஒரு காலை இழந்தவுடன் மோகன் சோர்ந்து விடாமல் உழைத்துச் சம்பாதித்துச் சாப்பிட வேண்டும் என்ற தன்னம்பிக்கையுடன் கடற்கரைச் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிக்குச் சேர்ந்தார். கடந்த 8 வருடமாக பெட்ரோல் பங்கில் பம்ப்மேனாக பணிபுரிந்து வரும் மோகன். மாதம் 12,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார். காலை 8 மணிக்கு பணிக்கு வந்து மறுநாள் காலை 8 மணிக்குத் தான் வீட்டுக்குச் செல்வதாகத் தெரிவிக்கிறார்.

தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்கள் தனக்கு ஒரு குறை இருக்கிறது என்று நினைக்காமல் அன்பும் அரவணைப்புடன் இணைந்து பணியாற்றுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும், அதுவே ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது என்று தெரிவிக்கிறார். அவரின் பணி அனுபவத்தைக் குறித்துத் தெரிவிக்கும் போது, ”நாளொன்றுக்குப் பல நூறு வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும்போது தன்னைப் பார்த்து பலரும் எப்படி பணிபுரிகிறாய் என்று கேட்கும் போது, மேலும் தனக்கு இந்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கவும் தோன்றுகிறது”என்று கூறியுள்ளார்.

ஒற்றைக் கால் இல்லாத நிலையிலும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மோகனை பெட்ரோல் பங்கிற்கு வரும் பலரும் அவரை பாராட்டிச் செல்கின்றனர். கால் இல்லை என்று எண்ணிச் சோர்ந்து விடாமல் சொந்தமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். மேலும் இளைஞர்களைப் பார்த்து எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

Also Read : 3 இடங்களில் 3 வேளையும் உணவு.. புதுச்சேரியில் நடிகர் கார்த்தி பிறந்தநாள் கொண்டாட்டம்..

top videos

    நம்பிக்கையுடன் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அவரின் மனைவியைக் கூட வேலைக்குச் செல்ல அனுமதித்ததில்லை என்றும் மோகன் கூறியுள்ளார். இந்த நிலையில், அவரின் பிள்ளைகளின் கல்விக்கு உதவி செய்ய வேண்டி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    First published:

    Tags: Children education, Physically challenged