முகப்பு /புதுச்சேரி /

பிரான்ஸ் நாட்டின் 'பெத்தாங்' விளையாட்டை இன்றும் விளையாடும் புதுச்சேரி மக்கள்!

பிரான்ஸ் நாட்டின் 'பெத்தாங்' விளையாட்டை இன்றும் விளையாடும் புதுச்சேரி மக்கள்!

X
பெத்தாங்

பெத்தாங் போட்டி

Puducherry News|புதுச்சேரி - பிரான்ஸ் இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் நடைபெற்ற பெத்தாங் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது 1858 ஆம் ஆண்டு சர்க்கிள் டி பாண்டிச்சேரி என்ற கிளப் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பிரெஞ்சு கலாச்சாரம் மறக்காத வகையில், இங்கே பல்வேறு பாரம்பரியமிக்க போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒன்றான பிரான்ஸ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் 'பெத்தாங்' போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்தியாவுக்கு சுற்றுலாவாக வந்துள்ள பிரான்ஸ் நாட்டு பயணிகள், பெத்தாங் போட்டியில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று தூதரகத்தின் அனுமதியோடு புதுச்சேரி வந்தனர்.

13 பேர் குழுவாக வந்த பிரான்ஸ் நாட்டவர்கள் புதுச்சேரி சட்டசபை அருகே உள்ள சர்க்கிள் டி பாண்டிச்சேரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டனர்.

<strong>உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற <a href="https://www.youtube.com/channel/UCgSkbmwaB-iVtyW3f0nL3Cg?sub_confirmation=1">கிளிக் </a>செய்க</strong>

இதில் புதுச்சேரியை சேர்ந்த பெத்தாங் அசோசியேஷன் சார்பில் மூன்று குழுவாக கலந்து கொண்டு போட்டியில் விளையாடினர். புதுவையில் உள்ள ஒரு குழுவும் பிரான்ஸில் இருந்து வந்த ஒரு குழுவும் போட்டியில் மோதிக்கொண்டனர்.

இறுதியில் இந்த போட்டியில் வென்றது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த குழுவினரரை வெற்றி பெற்றவர்களை அங்கிருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர்.

First published:

Tags: Local News, Puduchery