முகப்பு /புதுச்சேரி /

திருபுவனை அருகே இறந்தவருக்கு சாலையின் நடுவே ஈமச்சடங்குகள் செய்யும் அவலம்

திருபுவனை அருகே இறந்தவருக்கு சாலையின் நடுவே ஈமச்சடங்குகள் செய்யும் அவலம்

X
திருவண்டார்கோவில்

திருவண்டார்கோவில் அருகே இறந்தவருக்கு சாலையின் நடுவே  ஈமச்சடங்குகள் செய்யும் அவலம

Puducherry News | திருவண்டார்கோவில் அருகே இறந்தவருக்கு சாலையின் நடுவே  ஈமச்சடங்குகள் செய்யும் அவலம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

திருபுவனை அருகே உள்ள திருவெண்டார் கோவில் கிராமத்தில் இறந்தவர்களுக்கு சாலையோரத்தில் ஈம காரியங்களை செய்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம் திருபுவனை தொகுதி திருவெண்டார் கோவில் கிராமத்தில் இறந்தவர்களின் நினைவாக ஈம காரியங்களான தர்ப்பணம் உள்ளிட்ட கரும காரியங்கள் செய்ய அப்பகுதியில் இடமில்லாமல் சாலை ஓரத்தில் உள்ள அரச மரத்தடியில் ஈம சடங்குகளை செய்து வந்தனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையினர் விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலைக்காக நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள மரங்கள் கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் திருவண்டார்கோவில் , பெரிய பேட்டை, சின்ன பேட்டை, புதுநகர், வாய்க்கால் மேட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்களுக்கு அப்பகுதியில் ஈமச்சடங்குகள் செய்திட இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில் அப்பகுதியில் இறந்தவர் ஒருவருக்கு ஈமச்சடங்குகள் செய்திட தேசிய நெடுஞ்சாலை நடுவில் பந்தல் அமைத்து ஈமக்கிரியை காரியங்களை செய்தனர். இது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கேட்ட பொது, புதுச்சேரி அரசிடம் தங்களுக்கு ஈம காரிய நிகழ்ச்சிகள் செய்திட இடம் ஒதுக்கி தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.  மேலும் இப்ப பிரச்சனைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Puducherry