முகப்பு /புதுச்சேரி /

சாலையில் சென்ற பைக் மீது மோதல்.. கடலூர் கார் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த புதுவை மக்கள்..

சாலையில் சென்ற பைக் மீது மோதல்.. கடலூர் கார் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த புதுவை மக்கள்..

X
கார்

கார் ஓட்டுநருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்

Puducherry News : புதுச்சேரி நகரப்பகுதியில் அதிவேகமாக கரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பின்னர் நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நகரப்பகுதியான செஞ்சி சாலையில் கார் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட வாகனங்களின் மீது அந்த கார் மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து காரை விரட்டி பின் தொடர்ந்து வந்த பொதுமக்கள் புஸ்சி வீதியில் காரை மடக்கி பிடித்து காரை ஓட்டி வந்தவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் ஒதியஞ்சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்தது கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த புகழேந்தி என்பது தெரியவந்தது. பின்னர் போக்குவரத்து போலீசார் புகழேந்தி மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மது அருந்தி உள்ளாரா? என்று பரிசோதனை செய்தனர். புதுச்சேரி நகரப்பகுதியில் அதிவேகமாக காரை ஓட்டிய நபரை பொதுமக்கள்மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Puducherry