முகப்பு /புதுச்சேரி /

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம்.. புதுவையில் போக்குவரத்து துறை அதிரடி..

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம்.. புதுவையில் போக்குவரத்து துறை அதிரடி..

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம்.

போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம்.

Pondicherry Traffic Police | புதுச்சேரியில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுவோரிடம் 'இ-சலான்' கருவியை பயன்படுத்தி அபராதம் வசூலிக்கும் நடைமுறையை போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை அடுத்த வாரம் முதல் தொடங்கவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தற்போது கையால் எழுதி தந்தோ, கையடக்க கருவி மூலமாகவோ சலான் வழங்கப்படுவதும், ஸ்பாட்பைன் வசூலிப்பதும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுகிறது. போக்குவரத்து விதிமுறையை மீறுபவர்களிடம் கையில் பணம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அபராதம் வசூலிப்பதில் சிக்கல்கள் உள்ளன.

தொடர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் குறித்த விவரங்களை சேகரிப்பதும் முடியாமல் போகிறது. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில் 'இ-சலான்' கருவி மூலமாக 'ஸ்பாட் பைன்' வசூலிக்கும் நடைமுறை புதுச்சேரியில் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்காக புதுச்சேரி போக்குவரத்து துறையில் 50 'இ-சலான்' அதி நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றில் 35 கருவிகள் போக்குவரத்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மீதமுள்ள 15 கருவிகள் போக்குவரத்து துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படும்.

First published:

Tags: Local News, Puducherry