முகப்பு /புதுச்சேரி /

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் இதை பண்ணாதீங்க..! புதுவை பேராசிரியர் சொன்ன ஷாக் தகவல்..!

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளிடம் இதை பண்ணாதீங்க..! புதுவை பேராசிரியர் சொன்ன ஷாக் தகவல்..!

X
மாதிரி

மாதிரி படம்

Pondicherry Professor : மாணவர்களின் தொடர் தற்கொலையை தடுப்பதற்காக புதுச்சேரியில் படிப்பை தவிர்த்து மாணவர்களுக்கு நற்பண்புகளை இலவசமாக கற்றுத் தரும் உளவியல் துறை பேராசிரியர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத்தரவே தனியாக வகுப்பு எடுக்கிறார்.

பல்வேறு காரணங்களால் இளைய தலைமுறையினர் இடையே தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் படிப்பு மற்றும் சமூக நிலையில் சிறு தோல்விகளை கூட தாங்க முடியாத அளவுக்கு விரக்தியின் உச்சத்துக்கு சென்று உயிர்த்துறக்கும் பரிதாப முடிவை எடுகின்றனர்.

இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு சார்பாக மனரீதியாக ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியை சேர்ந்தவர் விஜி கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் இவர் உளவியல் துறையில் சிறந்த வல்லுனராகவும் உள்ளார்.

இந்நிலையில், பேராசிரியர் விஜி கோடை காலத்தில் தன் வீட்டைச் சுற்றி உள்ள மாணவர்களுக்கு படிப்பை தவிர்த்து சமூகத்தில் மாணவர்கள் எவ்வாறு செயலாற்ற வேண்டும் படிப்பு தவிர்த்து மனரீதியாக மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை சிறப்பு வகுப்பு போல் இலவசமாக நடத்தி வருகிறார் விஜி.

மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் புதுவை பேராசிரியர்

இதையும் படிங்க : பெண்களே இந்த பிரச்சனை உங்களுக்கு இருந்தால் உஷாரா இருங்க.. எச்சரிக்கை விடுக்கும் நெல்லை மருத்துவர்..

இதுகுறித்து அவரிடம் நாம் கேட்டபோது, “தற்போதுள்ள மாணவர்கள் சிறு தோல்விகளை கூட தாங்க முடியாமல் தற்கொலை முயற்சி செய்கின்றனர். மேலும் சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் படிப்பு தவிர்த்து மாணவர்களுக்கு நற்பண்புகள் கற்றுத்தர இந்த வகுப்புகளை எடுத்து வருகிறேன். பெற்றோர் சிறு வயதில் மாணவர்கள் மற்றும் குழந்தைகளிடம் செல்போன் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டாம்.

ஒரு காலகட்டத்தில் அவர்கள் அந்த மொபைலில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். பெரும் அளவில் செல்போன் உபயோகம் செய்வதால் தான் மாணவர்கள் மிகவும் பாதிப்படைகின்றனர். பெற்றோர் சிறுவயதில் மாணவர்களிடம் செல்போன் கொடுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்” என்று கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Puducherry