முகப்பு /புதுச்சேரி /

கோடை வெப்பத்தை தணிக்க காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த புதுவை பக்தர்கள்!

கோடை வெப்பத்தை தணிக்க காளியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த புதுவை பக்தர்கள்!

X
கோடை

கோடை வெப்பத்தை தணிக்க காளியம்மனுக்கு பாலாபிஷேகம்

Panithittu Kalliamman Temple : புதுச்சேரி மாநிலம் மீனவ கிராமமான பனித்திட்டில் உள்ள ஸ்ரீ காளியம்மனுக்கு பக்தர்கள் பால் குடம் எடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள மீனவ கிராமமான பனித்திட்டு கிராமத்தில் காலை 9 மணியளவில் ஊர் பொதுமக்கள் கடலோர கரைபகுதிக்கு சென்று 108 பால்குடம் எடுத்தனர். பின்னர் அவர்கள், வீதி புறப்பாடாக வந்து, பனித்திட்டு கிராமத்தில் எழுந்தருள ஸ்ரீகாளியம்மன் சன்னதியில் உள்ள மூலவரான ஸ்ரீ காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

கோடை வெப்பத்தை தணிக்க காளியம்மனுக்கு பாலாபிஷேகம்

வரும் எதிர்காலம் மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கவும் வேண்டி நேர்த்திக்கடனாக அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கினார். இந்த விழாவில் 150 க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

விழா ஏற்பாட்டினை பணித்திட்டு கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி, அன்பழகன், மாதவன், ஆறுமுகம், அய்யனாரப்பன், பலராமன், கோவிந்து, கலைவாணன், ராஜேஷ், இளையராஜா மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Puducherry