முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் பாரம்பரிய பிரெஞ்சு உணவு விற்பனையகம் திறப்பு..! இங்கு இதுதான் ஸ்பெஷல்?

புதுச்சேரியில் பாரம்பரிய பிரெஞ்சு உணவு விற்பனையகம் திறப்பு..! இங்கு இதுதான் ஸ்பெஷல்?

X
மாதிரி

மாதிரி படம்

French Food in Pondicherry : புதுச்சேரியில் மேற்கத்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரிய பிரெஞ்சு உணவுகள் விற்பனையகத்தை பிரான்ஸ் நாட்டு துணை தூதர் திறந்து வைத்தார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என வர்ணிக்கப்படும் புதுச்சேரி பல நூறு ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டு ஆதிக்கத்தின் கீழ் இருந்து 1954ல் தான் முழுமையாக இந்திய நாட்டிடம் புதுச்சேரியின் மொத்த ஆட்சிப்பரப்பையும் விடுவித்து சென்றனர். பிரெஞ்சு ஆட்சி அதிகாரத்தில் இருந்து, புதுச்சேரி விடுவிக்கப்பட்டாலும், அந்நாட்டு மக்கள், குடியுரிமை பெற்றவர்கள், புதுச்சேரி மக்களோடு இரண்டற கலந்து இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

பிரெஞ்சு கலாச்சாரத்தின் அத்தனை அம்சங்களும் இன்னும் அதன் பழமை மாறாமல் இருப்பதால் பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளை கவர புதுச்சேரி அரசும் பல்வேறு விதமான அம்சங்களை புதிது புதிதாக ஏற்படுத்தி வருகிறது.

பாரம்பரிய பிரெஞ்சு உணவுகள் விற்பனையகம் திறப்பு

இந்நிலையில், பிரெஞ்சுக்காரர்கள் காலை, மாலை உணவுகள் பெரும்பாலும் ரொட்டியிலான பொருட்கள், கேக் வகைகளைத்தான் பிரதான உணவாக எடுத்துக்கொள்கின்றனர். ஆகவே பிரான்ஸ் நாட்டுக்காரர்களை கவரும் வகையில் அலியான்ஸ் பிரெஞ்சு நிறுவனம் அருகே முற்றிலும் பிரெஞ்சு உணவுகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பிரான்ஸ் நாட்டு துணைத்தூதர் காம்பியமா துவக்கி வைத்தார். உணவுகளை தயாரிக்க நவீன இயந்திரங்கள் வந்தாலும் பிரான்ஸ் நாட்டிம் புராதன வழக்கப்படி, ரொட்டிகளை கைகளால் தான் தயாரிப்பார்கள். அதன் சுவையையே மேற்கத்தியர்கள் அதிகம் விரும்புவார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதன்படியே புதிதாக திறக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் அனைத்து விதமான ரொட்டிகள், கேக்வகைகள் கையாள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.  இது புதுச்சேரிக்கு வரும் மேற்கத்திய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது என இந்நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

    First published:

    Tags: Food, Lifestyle, Local News, Puducherry