முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி - கடலூர் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்.. மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் வெற்றி!

புதுச்சேரி - கடலூர் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்.. மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் வெற்றி!

X
சாலை

சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்

Pondicherry Cuddalore Road | புதுச்சேரி கடலூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி மக்களின் நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த காலங்களில் பெய்த மழையினால் சாலை கடுமையாக சேதம் அடைந்தது. இதனால் அந்தப் பாதை போக்குவரத்திற்கு பயன்படுத்துவது வாகன ஓட்டிகளுக்கு மிக சிரமமாக இருந்தது. இதனால் அங்கு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் அவ்வழியே செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கின.

இது சம்பந்தமாக பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் பொதுமக்களும் புதிய தார் சாலை அமைக்க கோரி பலமுறை கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை கோட்டம் சார்பில் 17.98 கோடியில் சாலை வசதி அமைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இதற்கான பூமி பூஜை கடந்த செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி தவளக்குப்பம் பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

ஆனால் மீண்டும் மழை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் என பல காரணங்களால் பணி தொடங்கப்படாமல் இருந்தது மேலும் முதல் கட்டமாக ஒரு சில இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் அமைக்கும் பணி நடைபெற்றது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தார் சாலை அமைக்கும் பணி முள்ளோடை எல்லை பகுதியில் தொடங்கியது.

சாலை பணி விரைவாகவும் இடையூறு இல்லாமலும் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணியின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் ஆறுமுகம் மற்றும் கண்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முழுமையான தரமான சாலை அமைக்க வாகன ஓட்டிகள் சாலையோர வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இப்பணியுடன் வடிகால் வாய்க்கால் அமைப்பது, சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்துவது சாலையில் வர்ணங்கள் தீட்டுவது எச்சரிக்கை பலகைகள் வைப்பது ஆகிய பணிகளும் சேர்த்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

First published:

Tags: Lack of road facility, Local News, Puducherry, Road Safety