முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி நவநீதகிருஷ்ணன் கோயிலின் சித்திரை தேரோட்டம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு

புதுச்சேரி நவநீதகிருஷ்ணன் கோயிலின் சித்திரை தேரோட்டம்! - திரளான பக்தர்கள் பங்கேற்பு

X
தேரோட்டம்

தேரோட்டம்

தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ள நவநீதகிருஷ்ணன் திருக்கோயிலின் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி குயவர்பாளையத்தில் உள்ள நவீனா கார்டன் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் திருக்கோவில். இந்த திருக்கோவிலின் சித்திரை திருநாள் பிரமோற்சவம் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

அதனைத் தொடர்ந்து, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் நவநீதகிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர், சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழவான திருத்தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, நவநீதகிருஷ்ணன் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டு பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் திருதேரை முக்கிய வீதிகளின் வழியாக இழுத்து சுவாமியை வணங்கி வழிபட்டு சென்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Puduchery