டேக்வாண்டோ ஆப் இந்தியாவின் 38-வது சீனியர் நேஷனல் டேக்வாண்டோ போட்டி புதுச்சேரி உப்பளத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. டேக்வாண்டோ விளையாட்டு சங்கம் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியில் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஐஜி சந்திரன் ஏற்றுக்கொண்டார். டேக்வாண்டோ ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் ஐசரி கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் மனுஷ்கர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் 36 மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பல பிரிவுகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் புதுச்சேரி டேக்வாண்டோ விளையாட்டு சங்க நிறுவனர் ஸ்டாலின், செயலாளர் மஞ்சுநாத், துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பொருளாளர் அரவிந்த், அஸ்வின், நந்தகுமார், உதயகுமார், அஸ்வினி, அருண் கோஷ், தனுஷ் பிரியா, பகத்சிங் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Puducherry, Sports