முகப்பு /புதுச்சேரி /

மரக்காணம் அருகே மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருளால் பரபரப்பு..

மரக்காணம் அருகே மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருளால் பரபரப்பு..

X
மீனவர்

மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருள்

Puducherry News : புதுச்சேரி அருகே கடலில் மீனவர் வலையில் மர்ம பொருள் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(38). இவர் சக மீனவர்களுடன் இன்று காலை வழக்கம்போல் விசைப்படகில் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்துக் கொண்டு கரை திரும்பியுள்ளார். அப்போது அவரது வலையில் ஒரு மர்ம பொருள் இருந்துள்ளது. இதனைப் பார்த்து அவர் இது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கும் என்று கருதி வனத்துறை, காவல்துறை, கடலோர காவல் படை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீனவர் வலையில் சிக்கிய சுமார் 10 கிலோ எடையுள்ள மர்ம பொருளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருக்கக்கூடும். ஆனாலும் இதனை முறையாக ஆய்வகத்தில் சோதனை செய்தால் மட்டுமே இதன் உண்மை தெரியவரும் என தெரிவித்தனர். மேலும் இது திமிங்கலத்தின் கழிவு பொருளாக இருந்தால் இதன் மதிப்பு சர்வதேச அளவில் பல கோடி ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அதிகாரிகள் அங்கு இருந்து அந்த திமிங்கல கழிவை ஆய்வுக்காக பத்திரமாக எடுத்து சென்றனர். மீனவர் வலையில் சிக்கிய மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Puducherry