முகப்பு /புதுச்சேரி /

முத்தியால்பேட்டையில் விமரிசையாக நடைபெற்ற முத்தையா சுவாமி தேரோட்டம்!

முத்தியால்பேட்டையில் விமரிசையாக நடைபெற்ற முத்தையா சுவாமி தேரோட்டம்!

X
முத்தையா

முத்தையா சுவாமி தேரோட்டம்!

Pondicherry News| புதுச்சேரி முத்தியால்பேட்டை  அருள்மிகு முத்து மாரியம்மன், முத்தையா சுவாமி தேவஸ்தானத்தில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முத்தியால்பேட்டை முத்தையா சுவாமி தெருவில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் முத்தையா சுவாமி தேவஸ்தானம். இந்த தேவஸ்தானத்தில் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மாதம் 26 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட முத்தையா சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க முத்தையா சுவாமி மங்கல நானை வள்ளி தேவசேனாவிற்கு சூட்ட பொதுமக்கள் சூழ்ந்து மலர் தூவி திருக்கல்யாண வைபவத்தை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

தொடர்ந்து பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட முத்தையா சுவாமி திருத்தேரில் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தேர் இழுத்து செல்லப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

top videos
    First published:

    Tags: Local News, Pondicherry