முகப்பு /புதுச்சேரி /

முதலியார்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம்..! திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்..

முதலியார்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம்..! திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்..

X
முதலியார்பேட்டை

முதலியார்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

Mudaliarpet Srinivasa Perumal Temple Chariot Festival 2023 |புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஅலர்மேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேர் மாட வீதி உலா நடைபெற்றது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி முதலியார்பேட்டை ஸ்ரீவன்னிய பெருமாள் ஸ்ரீஅலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் சித்திர பிரம்மோற்சவ விழா கடந்த 7ம் தேதி பெருமாள் தாயார் திருமஞ்சனம் மற்றும் ஸ்ரீசேனை முதல்வர் புறப்பாடுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஸ்ரீனிவாச பெருமாள் இந்திர விமானம், சூரிய பிரபை வாகனம், சேஷ வாகனம், கருட சேவை அனுமார் வாகனம், யானை வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

தொடர்ந்து சூரண அபிஷேகம் நடத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் மற்றும் குதிரை வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் உற்சவம் நடைபெற்றது.விழா நாட்களில் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

முதலியார்பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் தேரோட்டம்

தொடர்ந்து, 12ம் நாள் விழாவாக பூக்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் மாட வீதியில் உலா வந்தது. முதலியார்பட்டை முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த தேரானது, மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் பிரசாதமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலியார்பேட்டை ஸ்ரீவன்னிய பெருமாள் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    First published:

    Tags: Local News, Puducherry