நாடோடி பழங்குடியின வகுப்பை சேர்ந்த குமரேசன் சென்னை, புதுவை பகுதிகளில் கிடைக்கும் இடங்களில் வசித்து வருகிறார்.குமரேசனுக்கு ஏற்கனவே ராஜேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணமாகி 4 ஆண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மற்றொருவரின் மனைவியான சங்கீதாவை 2-வதாக திருமணம் செய்தார் குமரேசன். சங்கீதா கர்ப்பமாகி கடந்த 29 நாட்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
குமரேசன் சங்கீதாவை அழைத்துக்கொண்டு புதுவை கிருமாம்பாக்கத்துக்கு வந்தனர். அங்குள்ள சமுதாய கூடம் அருகே உள்ள காலி இடத்தில் கடந்த சில நாட்களாக வசித்து வந்துள்ளார்.புதுவை குளக்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் குமரேசன், சங்கீதா இருவரும் குழந்தையை அருகில் படுக்க வைத்துவிட்டு தூங்கினர். மறுநாள் கண் விழித்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை.
இதற்கிடையே புதுக்குப்பம் கடற்கரையில் ஞாயிறு காலையில் ஒரு குழந்தையின் தலை மட்டும் மணலில் புதைந்த நிலையில் இறந்து கிடந்தது தெரிந்தது.அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: நாள்தோறும் மாந்திரீக பூஜை.. தலையை துண்டித்து நரபலி கொடுத்த தம்பதி
தகவல் அறிந்த குமரேசன் சங்கீதா தம்பதியினர் அங்கு வந்து, மணலில் புதைக்கப்பட்டு இருந்தது தங்களது குழந்தைதான் என்பதை உறுதிபடுத்தினர்.மேலும் குழந்தையின் உடலை பார்த்து சங்கீதா கதறி அழுதது அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் தாங்கள் படுத்திருந்த இடம் அருகே சுற்றி வந்ததாகவும், அவர்தான் குழந்தையை கொலை செய்ததாகவும் குமரேசன், சங்கீதா தம்பதி தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே குழந்தையை சங்கீதா நள்ளிரவில் தூக்கிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.கணவன்-மனைவி பேச்சில் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.குழந்தை தனது சாயலில் இல்லை, இது தனது குழந்தை இல்லை என்று குமரேசன் தெரிவிக்க, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் விரக்தி அடைந்த சங்கீதா, நள்ளிரவில் குழந்தையை கடற்கரை மணலில் உயிரோடு புதைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சங்கீதாவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.கணவனின் சந்தேகத்தால் குழந்தையை பச்சிளம் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Puducherry