முகப்பு /புதுச்சேரி /

புதுவையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி.. செவிலியர்கள், மாணவர்கள் பங்கேற்பு..

புதுவையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி.. செவிலியர்கள், மாணவர்கள் பங்கேற்பு..

X
புதுவையில்

புதுவையில் காசநோய் விழிப்புணர்வு பேரணி

Puducherry News | புதுச்சேரி அரசு தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

காசநோயை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு புதுச்சேரி கடற்கரை சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மதர் தெரேசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவன செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காச நோயால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், அதன் அறிகுறிகள், காசநோய் பரவும் முறைகள், அதற்கான மருத்துவ முறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனைத்தொடர்ந்து, கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று அரசு மார்பு நோய் நிலையத்தில் நிறைவுபெற்றது. பேரணியில் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேஷ், மாவட்ட காசநோய் மருத்துவ அதிகாரி விவேகானந்தா, தகவல் தொடர்பு அதிகாரி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Puducherry