முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி மொரட்டாண்டி பிரித்யங்கரா காளி கோவிலில் சித்திரை மாத திருவிழா கோலாகலம்!

புதுச்சேரி மொரட்டாண்டி பிரித்யங்கரா காளி கோவிலில் சித்திரை மாத திருவிழா கோலாகலம்!

X
புதுச்சேரி

புதுச்சேரி பிரித்யங்கரா கோயில்

Puducherry News | புதுச்சேரி பிரித்யங்கரா காளி கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியை அடுத்துள்ள, மொரட்டாண்டியில் அமைந்துள்ள பிரித்யங்கரா காளி கோவிலில் சித்திர மாத திருவிழாவில்  அம்மனுக்கு வருடத்திற்கு ஒருமுறை செய்யப்படும் சிறப்பு விபூதி அலங்கார பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி பகுதியில் அமைந்துள்ள 72 அடி உயரம் கொண்ட உலகிலேயே மிக உயரமான மகா பிரத்தியங்கிரா காளி கோவிலில், சித்திரை மாத திருவிழாவை ஒட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி ஆலய பீடாதிபதி நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் தலைமையில் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வருடத்தில் ஒருமுறை செய்யப்படும் விபூதி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரத்தியங்கிரா காளியை விபூதி அலங்காரத்தில் தரிசனம் செய்தால் நோய் நொடிகள் நீங்கி குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் நிம்மதியும் பெருகும் என்பது ஐதீகம். இதனால், ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இதில் ஆலய துணை பீடாதிபதி வரத தேசிகன் ஆலய தலைமை அர்ச்சகர் பாலு சுவாமிகள் உட்பட ஆலய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Festival, Local News, Puducherry