முகப்பு /புதுச்சேரி /

தைப்பூசத்தையொட்டி புதுவை செட்டிபட்டு கிராமத்தில் மிளகாய் அபிஷேகம் செய்து கொண்ட பக்தர்கள்

தைப்பூசத்தையொட்டி புதுவை செட்டிபட்டு கிராமத்தில் மிளகாய் அபிஷேகம் செய்து கொண்ட பக்தர்கள்

X
தைப்பூசத்தையொட்டி

தைப்பூசத்தையொட்டி புதுவையில் மிளகாய் அபிஷேகம்

Puducherry Thaipusam Festivel | பக்தர்கள் தங்கள் உடல் மீது உரலை வைத்து அதில் மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை இடித்து, மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்தி கடன் செலுத்தி கொண்டனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரி அருகே உள்ள செட்டிபட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோயிலில் தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்துக்களின் சிறப்புக்குரிய நிகழ்வாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தின் போது முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த நாளில் மக்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.புதுச்சேரி அருகே உள்ள செட்டிபட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோயிலில் தைப்பூச விழா நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்போது பக்தர்கள் கொண்டு வந்த பால், பன்னீர், தயிர் உள்ளிட்ட வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், பக்தர்கள் தங்கள் உடல் மீது உரலை வைத்து அதில் மிளகாய், மஞ்சள் உள்ளிட்டவற்றை இடித்து, மிளகாய் அபிஷேகம் நடைபெற்றது.

First published:

Tags: Local News, Puducherry