முகப்பு /புதுச்சேரி /

மிளகாய் பொடியால் அபிஷேகம் செய்த பக்தர்கள்.. புதுச்சேரியில் நூதன வழிபாடு!

மிளகாய் பொடியால் அபிஷேகம் செய்த பக்தர்கள்.. புதுச்சேரியில் நூதன வழிபாடு!

X
பக்தர்களுக்கு

பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம்

Puducherry | புதுச்சேரி அடுத்த ஆரோவில் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் உள்ளிட்ட ஆறு வகை அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி ஆரோவில் அடுத்த ஆலங்குப்பம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா கடந்த 15ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

இதனை ஒட்டி அங்காள பரமேஸ்வரிக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தப்பெற்று வந்தது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான மிளகாய் தூள் பொடி அபிஷேகத்திற்கு 50 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு அபிஷேகம் செய்வதற்காக 50 கிலோ மிளகாய் பொடி மற்றும் தயிர், எலுமிச்சை,மஞ்சள்,பால், இளநீர், உள்ளிட்ட ஆறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதன்படி பக்தர்களுக்கு மிளகாய் தூள் பொடியை கரைத்து தலையில் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மிளகாய் பொடி அபிஷேகம் செய்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்துள்ளனர். மேலும் விழா முடிவில் பக்தர்களுக்கு இந்தப் பகுதியின் முக்கிய பிரமுகர்களான செந்தில் மற்றும் அய்யனார் ஆகியோர் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Puducherry, Temple