முகப்பு /புதுச்சேரி /

வாய் ஆரோக்கியத்தை வலியுறுத்தி புதுவையில் மருத்துவ மாணவர்கள் நடைபயணம்...

வாய் ஆரோக்கியத்தை வலியுறுத்தி புதுவையில் மருத்துவ மாணவர்கள் நடைபயணம்...

X
மருத்துவ

மருத்துவ மாணவர்கள் நடைபயணம்

Puducherry News | உலக வாய் ஆரோக்கிய தினத்தையொட்டி  வாய் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் விதமாக புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு நடைபயணத்தில் ஏராளமான  மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மனித உடலின் முக்கிய உறுப்பான வாய் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், பொது மக்களிடையே இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் தேதி உலக வாய் சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு "உங்கள் வாயால் பெருமைப்படுங்கள்" என்ற கருத்தைமையமாக கொண்டு புதுச்சேரி மாநில சுகாதார சங்கம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதுச்சேரி கடற்கரையில் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் 300க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்கள் பங்கேற்று வாய் சுகாதாரத்தை பாதுகாப்பது குறித்த பதாகைகளை ஏந்தியவாறு நகரின் பல்வேறு சாலைகளில் நடைபயணமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    First published:

    Tags: Local News, Puducherry