முகப்பு /புதுச்சேரி /

கறி வாங்கினால் சில்வர் பாத்திரம் இலவசம்.. பிளாஸ்டிக்கை தவிர்க்க புதுவை சிக்கன் கடைக்காரரின் அசத்தல் முயற்சி

கறி வாங்கினால் சில்வர் பாத்திரம் இலவசம்.. பிளாஸ்டிக்கை தவிர்க்க புதுவை சிக்கன் கடைக்காரரின் அசத்தல் முயற்சி

X
பாத்திரம்

பாத்திரம் வழங்கும் கடை உரிமையாளர்

Puducherry | புதுச்சேரியில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் கறி வாங்கும் நபர்களுக்கு சில்வர் பாத்திரத்தை கறிக் கடை உரிமையாளர் வழங்கிவருகிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி ஆலை சாலையில் உள்ளது உமா பிரபு சிக்கன் சென்டர். இந்த சிக்கன் சென்டரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. தங்களது வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் சில்வர் பாத்திரத்தை வழங்கி வருகின்றார் அதன் உரிமையாளர் திரிபுரி சந்திரன்.

அதேபோன்று விடுமுறை தினங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு சில்வர் ஃபேஷன் பாத்திரத்தை வழங்கினார். பாத்திரத்தை வழங்கிய அவர் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவரை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இதை வழங்குவதாகவும், சிக்கன் வாங்க வருபவர்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து விட்டு இனி இந்த சில்வர் பாத்திரங்களை கொண்டு வந்து அடுத்த முறை கறி வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

First published:

Tags: Local News, Puducherry