முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி அகத்தியர் கோட்டம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை

புதுச்சேரி அகத்தியர் கோட்டம் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை

X
அங்காள

அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை

Puducherry News | புதுச்சேரி மாநிலம் அகத்தியர் கோட்டம் பகுதியில் உள்ள வனபத்ரகாளியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மார்க்கண்டியம்மன் ஆலயத்தில் 2ம் ஆண்டு மயான கொள்ளை ரணகளிப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி மாநிலம் அகத்தியர் கோட்டம் பகுதியில் எழுந்தருளி உள்ள வனபத்ரகாளியம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், மார்க்கண்டியம்மன் ஆலயத்தில் உள்ளரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 2ம் ஆண்டு மயான கொள்ளை விழா கடந்த வெள்ளிக்கிழமை கரகம் புறப்பாடுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை மற்றும் ரணக்களிப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் நிசாசனி உருவம் போடப்பட்டு ரணகளிப்பு நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சாமியிடம் பிரசாதம் வாங்கினர். இதனைத்தொடர்ந்து காசுகள், காய்கறிகளை வாரி இறைத்து மயானகொள்ளை நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயானகொள்ளை விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகி விஜயபாரதி மற்றும் அஞ்சாலாட்சி விஜயபாரதி மற்றும் ஊர் பொதுக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

First published:

Tags: Local News, Puducherry