முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரியில் தொடங்கியது அங்காளம்மன் மயான கொள்ளை.. 27ஆம் தேதி தாண்டவமாடபோகும் காளி!

புதுச்சேரியில் தொடங்கியது அங்காளம்மன் மயான கொள்ளை.. 27ஆம் தேதி தாண்டவமாடபோகும் காளி!

X
அங்காளம்மன்

அங்காளம்மன் கோயில் திருவிழா

Puducherry mayana kollai | புதுச்சேரி அங்காளம்மன் கோயிலின் மயான கொள்ளை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

புதுச்சேரி வம்பாக்கீரை பாளையத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பழமையானதாகும். இந்த கோயிலில் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் மயான கொள்ளை விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு சாகைவார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனை அடுத்து வரும் 27ஆம் தேதி மயான கொள்ளை மகோற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து அம்மன் வீதி உலாவும் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி வம்பாக்கீரை பாளையம் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Festival, Local News, Puducherry