முகப்பு /புதுச்சேரி /

புதுச்சேரி சண்முகபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை

புதுச்சேரி சண்முகபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை

X
ஸ்ரீஅங்காள

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை

Sri Angala Parameshwari Amman Temple Shanmugapuram : புதுச்சேரி உழவர்கரை சண்முகபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி சண்முகபுரம் அன்னை சோனியா காந்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய 10ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் கடந்த தேதி 17ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் குதிரை ஊர்வலம் செங்குளத்து ஐயனாரப்பனுக்கு ஊரணிப் பொங்கல், கொடியேற்றம், காப்பு கட்டுதல், மூலவர் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் கரகம் புறப்பாடு நடைபெற்று சாகை வார்த்தல் நடைபெற்றது. மேலும், 2ம் நாள் குறத்தி வேடத்தில் எல்லை மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூலவர் காளி அலங்காரத்தில் எழுந்தருளி ரணம் களிப்பு மற்றும் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடைபெற்றது .

பின்னர் மயான கொள்ளை நிகழ்ச்சியில் பழங்கள் மலர்கள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்த அம்மனுக்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாணயங்கள் காய்கறிகள் பழங்கள் சிறுதானியங்கள் உள்ளிட்டவைகளை கொள்ளை விட்டு பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பொதுமக்கள், ஆலய நிர்வாகிகள் ஊர் தலைவர் வீரபத்திரன், நாட்டாமை கமலக்கண்ணன், செயலாளர் பழனிராஜா, பொருளாளர் அருண்பிரசாத், ஆலய பொறுப்பாளர் பிரதீப் சந்துரு, துணை தலைவர்கள் ராஜா என்ற லோகிதாசன் வேலு, அமைப்பாளர் வஜ்ரவேல், சரவணபவ, துணை செயலாளர்கள் தண்டபாணி, சந்தோஷ்குமார், ஒருங்கிணைப்பு செயலாளர்கள் அய்யனார் செல்வம் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சோனியா காந்தி நகர் இளைஞர்கள் ஆகியோர் திரளாகக் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

    First published:

    Tags: Local News, Puducherry